நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணாப்பாளர் சீமான் மீது, தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில், சீமான் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி அன்று, நாம் தமிழர் கட்சி சார்பில், சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
அதில் கலந்து கொண்டு பேசிய சீமான், மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனத்தினை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து, அவருடையப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குனியமுத்தூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தேசத்துரோகம் மற்றும் இரு பிரிவுகளுக்கு இடையே, பிரச்சனையை உருவாக்கும் விதத்தில் பேசுவதற்காக இரண்டு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.