10,000 மாணவர்கள் மீது வழக்கு! அனைவருமே அடையாளம் தெரியாதவர்கள் என எப்ஐஆர்!

30 December 2019 அரசியல்
studentsprotest.jpg

டெல்லியில், போராட்டத்தில் ஈடுபட்ட 10,000 மாணவர்கள் மீது, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக, திருத்தப்பட்ட தேசியக் குடியுரிமை மசோதாவிற்கு எதிராகப் பல்லாயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்திய பொழுது, போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதனையடுத்து, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வட இந்தியாவின் பல இடங்களில், வன்முறை, கலவரம், பொதுச் சொத்துக்கள் சேதம், தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட விஷயங்கள் நடைபெற்றன. இந்நிலையில், டிசம்பர் 15ம் தேதி டெல்லியில் போராடத்தில் ஈடுபட்டதாக, அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்தனர்.

10,000 பேரின் மீதும் 188 மற்றும் 341 பிரிவுகளின் கீழ், வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே, அடையாளம் தெரியாதவர்கள் எனவும் முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

HOT NEWS