பிரபல யூடியூப் சேனலான, கருப்பர்கூட்டம் சேனல் மீது, தற்பொழுது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திராவிடக் கழகத்தின் பற்றாளராக இருந்து வருகின்ற நபர்கள், கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இந்த சேனலானது, நாத்திவாதிகள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
இதில் வருகின்ற ஆபாசப் புராணம் என்ற நிகழ்ச்சி மூலம், புராணங்களில் கூறப்பட்டு உள்ள ஆபாசமான விஷயங்களைப் பேசி வந்தனர். மேலும், அது குறித்து விளக்கமும் அளித்து வந்தனர். இதனால், இந்த சேனல் மீதுப் பலதரப்பட்டவர்களும் வெறுப்பினை வெளிப்படுத்தினர். குறிப்பாக, இந்து மத வழிபாட்டினை மேற்கொண்டவர்கள் இந்த சேனலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது அவர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க முடிவு செய்தனர்.
இதனிடையே, இன்று கருப்பூர் கூட்டம் யூடியூப் சேனல் மீது, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சாதி, மத மற்றும் இன மொழி ரீதியிலான மோதலை தூண்டுவதாக, இந்த சேனல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ், கருப்பர்கூட்டம் யூடியூப் சேனல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.