பாஜகவில் சேர்ந்ததும் மோசடி வழக்குத் தள்ளுபடி ஆனது!

24 March 2020 அரசியல்
jyotiradityamscindia1.jpg

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள அரசியல் மாற்றத்திற்கு ஆதாரமாக அமைந்தது ஜோதிராதித்யா சிந்தியாவின் முடிவு தான். அவர் தன்னுடைய எம்எல்ஏ பதவியினை ராஜினாமா செய்ததோடு, தற்பொழுது பாஜகவிலும் சேர்ந்தார்.

கடந்த மார்ச் 10ம் தேதி அன்று, தன்னுடைய 22 ஆதரவு எம்எல்ஏக்களுடன் பதவியினை ராஜினாமா செய்த சிந்தியா, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மார்ச் 12ம் தேதி ஆளும் கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியானது, சிந்தியா மீதி, நில மோசடிப் புகாரில் வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை அன்று காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் கவிழ்ந்தது. முதல்வராக இருந்து வந்த கமல்நாத், தன்னுடைய பதவியினை ராஜினாமா செய்தார். இதனால், நேற்று பாஜக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது. மேலும், அக்கட்சியின் சிவராஜ் சிங் சவ்கான் முதல்வராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்றார்.

இதனை முன்னிட்டு, சிந்தியா மீது பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்கானது தற்பொழுது முடித்து வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு, ஆறாயிரம் ஏக்கர் நிலத்தினை விற்பதாக பல லட்ச ரூபாயினை பெற்ற சிந்தியா குடும்பத்தினர், ஒரு சில ஏக்கர் நிலத்தினை விற்றதால், பாதிக்கப்பட்டவர் வழக்குத் தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS