கௌதம் கம்பீர் மீது புகார்! உடனிருந்தவர்கள் மீதும் ஏமாற்றிய புகார்!

29 September 2019 அரசியல்
gautamgambhir.jpg

கிரிக்கெட்டில் இருந்து பாஜக கட்சியின் எம்பியாக மாறியுள்ள, கௌதம் கம்பீர் மீது தற்பொழுது, புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு, டெல்லியில் உள்ள காசியாபாத்தின் இந்திராபுரம் என்ற பகுதியில், ப்ளாட்டுகள் கட்டித் தருவதாகக் கூறி, 50க்கும் மேற்ப்பட்டோரிடம் கோடிக் கணக்கான ரூபாயை, ருத்ரா பில்ட்வெல் பிரைவேட் லிமிடட், ஹெச் ஆர் சிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நினுவங்கள் வசூல் செய்துள்ளன. இந்த நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராகவும், நிறுவன இயக்குநராகவும் இருந்தவர் கௌதம் கம்பீர்.

தற்பொழுது வரை, எவ்வித பிளாட்டும் யாருக்கும் வழங்கப்படவில்லை என, 50க்கும் மேற்ப்பட்டோர், டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு முக்கியக் காரணமாக இருந்த முகேஷ் குராணா, கௌதம் மெக்ரா மற்றும் பபிதா குரணா ஆகியோர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி, போலீசார் வழக்கப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் எழுதியுள்ள முதன் தகவல் பதிவேட்டில், கௌதம் கம்பீர், விளம்பரத் தூதராக செயல்பட்டு, முதலீட்டினை ஈர்த்துள்ளார் எனவும், அதனை புகார் அளித்துள்ளவர்கள் தெரிவித்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர்.

HOT NEWS