தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு, தனி ஆணையம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக பாமக உள்ளிட்டப் பலக் கட்சிகள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பினை நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இந்த சூழலில், 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தற்பொழுது சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவைப்படுவதாகவும், குறிப்பிட்டு உள்ளார்.
எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பானது தேவைப்படுவதாகவும், அதற்கேற்றாற் போலப் புள்ளி விவரங்களை ஆராய்ந்து விரைவில் செயல்படுத்தப்படும். இதற்காக புதிய ஆணையமானது விரைவில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.