நடிகர் சூர்யா, ஆர்யா நடிப்பில், கேவி ஆனந்த் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சென்ற வாரம் வெள்ளிக் கிழமை வெளியானத் திரைப்படம் காப்பான். இத்திரைப்படம், தற்பொழுது வெற்றிகரமாக திரையறங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கின்றது.
அந்தத் திரைப்படத்தில், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, சில வசனங்கள் பேசப்பட்டு உள்ளன. இந்நிலையில், அதற்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கும் வகையில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கேவி ஆனந்திற்கு, காவிரி டெல்டா விவசாயிகளின் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.பிஆர். பாண்டியன் அவர்கள், பச்சைத் துண்டை அணிவித்து, மரியாதை செய்தார்.
அவருடன், அச்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இதனை தற்பொழுது, சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், கொண்டாடி வருகின்றனர்.