சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து! மத்திய அரசு அதிரடி!

26 June 2020 அரசியல்
indianstudents.jpg

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை, ஜூலை மாதம் நடத்த சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

இதனை எதிர்த்து பெற்றோர்கள் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், தேர்விற்கு மாணவர்கள் சென்றால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், முந்தைய செய்முறைத் தேர்வுகள் மற்றும் பருவத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கலாம் என்றுக் கூறப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கடந்த செவ்வாய் கிழமை அன்று, மத்திய அரசு இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று, மத்திய அரசுக்காக ஆஜரான வழக்கறிஞர், தற்பொழுது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்துப் பரிசீலனை செய்து வருவதாகக் கூறினார். இதனிடையே, வருகின்ற வியாழக்கிழமை அன்று, இது குறித்து தெளிவான முடிவினை சமர்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது.

நேற்று, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், சிபிஎஸ்இ நடத்த இருந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்தது.

HOT NEWS