புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பிரச்சனையாக, புத்தகத்தில் இருந்து வந்த வண்ணம் உள்ளன. அவைகளில் தற்பொழுது, சமூக வலைதளங்களில் வலம் வரும் பிரச்சனை தான் இந்த தலித் பற்றிய கேள்வி.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில், ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் அரசியல் வாழ்வு என்ற புத்தகத்தில், தலித் என்ற வார்த்தை உட்பட, பல சர்ச்சைக்குரிய கேள்விகள் உள்ளன. இதற்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, தலித் என்ற வார்த்தைப் பயன்படுத்துவது, அவர்களை கஷ்டப்படுத்தும் வார்த்தையாக கருத்தப்படுகிறது. அதற்குப் பதிலாக, பட்டியலினத்தவர் என்றேப் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில், தலித் என்ற வார்த்தை புத்தகத்தில் இருப்பது மட்டுமின்றி, இஸ்லாமியர்களின் வழக்கமான குணம் என்ன? என்ற கேள்விக்கு, அவர்கள் பெண் குழந்தைகளைப் படிப்பதற்கு, பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள் என, குறிப்பிடப்பட்டுள்ளது.