சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு உள்ளன! மாஜிஸ்திரேட் அறிக்கை!

01 July 2020 அரசியல்
sathankulamlockup.jpg

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு உள்ளதாக, நீதிபதி பாரதிதாசன் கூறியுள்ளார்.

கடந்த மாதம், தூத்துக்குடி சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோர் மரணமடைந்தனர். இது குறித்து, பதிலளித்தக் காவல்துறையினர், பென்னிங்ஸ் மாரடைப்பால் காலமாகி உள்ளார் எனத் தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோரின் ஆசனவாய்களில், போலீசார் லத்தியினை விட்டு அடித்ததாக பரபரப்புக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில், அந்த பிரச்சனைக் குறித்து விசாரிக்க உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவித்தது. அதற்காக பாரதிதாசன் என்ற நீதிபதியினையும் நியமித்தது.

நீதியரசர் பாரதிதாசன் அவர்கள், நேற்று முன்தினம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். ஆனால், அவருக்கு உரிய முறையில் யாரும் ஒத்துழைப்புத் தரவில்லை என, அவர் நீதிமன்றத்தில் கூறினார். இதனைத் தொடர்ந்து, அம்மாவட்ட ஐஜி, டிஜிபி உள்ளிட்டோரும் அவ்வாறே நடந்து கொள்வதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, அவர்களை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று காலையில் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளார். அப்பொழுது, அங்கிருந்த கான்ஸ்டபிள் நீதியரசரை மிரட்டியுள்ளார். இதனால், மேற்கொண்டு நீதிபதியினால் இதனை விசாரிக்க இயலவில்லை. இந்த சூழ்நிலையில், நேற்று மதியத்திற்கு மேல் மீண்டும் காவல்நிலையத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளார்.

அப்பொழுது, பல திடுக்கிடும் சம்பவங்களை கண்டறிந்துள்ளார். அங்கிருந்த காவலர்கள் சரிவர பதிலளிக்கவில்லை. அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு உள்ளன. ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோரை, அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய அடித்தாக சாட்சி பதிவு செய்யப்பட்டது. அவர்களை அடிக்கப் பயன்படுத்திய லத்தியில் இரத்தக் கரியும், மேஜைகளில் இரத்தக் கரையும் படிந்துள்ளன.

அனைத்துப் போலீசிடமும் லத்தியினைக் கேட்ட போது, யாரும் தருவதற்கு முன்வரவில்லை எனவும், பின்னர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் காரணமாக தந்ததாகவும், அதில் மகாராஜ் என்பவர் லத்தியே எனக்குக் கிடையாது என்றுக் கூறியதாகவும் நீதியரசர் பாரதிதாசன் பதிவு செய்துள்ளார். இது தற்பொழுது பெருமளவில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS