சாத்தான்குளம் காவல்நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை மீட்க முயற்சி!

04 July 2020 அரசியல்
cctvcamera.jpg

சாத்தான்குளம் காவல்நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக, சிபிசிஐடி போலீஸ் ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 19ம் தேதி அன்று, தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்துள்ள ஜெயக்குமார் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோர், போலீசாரால் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில், பென்னிங்ஸ் மருத்துவமனையில், நெஞ்சுவலி காரணமாக சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அதே போல், பென்னிங்ஸின் தந்தையும் மர்மமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இதற்கு நீதிக் கேட்டு கண்டனக் குரல்கள் எழுந்தன. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் இது பற்றி தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கினை, சிபிசிஐடிப் பிரிவிற்கு, தமிழக முதல்வர் மாற்றி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தற்பொழுது வரை ஐந்து காவலர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே, இன்று சாத்தான்குளம் காவல்நிலையமானது, வருவாய்துறையிடம் இருந்து, மீண்டும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு, இருந்த சிசிடிவி காட்சிகள் அழிந்து இருந்தன. இது பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புலனாய்வுப் பிரிவு ஐஜி சங்கர், சாத்தான்குளம் காவல்நிலையத்தின் அழிந்து போன சிசிடிவி காட்சிகளை மீட்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை எனவும், சுதந்திரமாகவே இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றக் காவலில் உள்ள போலீசாரை அடுத்த வாரம், விசாரணைக்காக சிபிசிஐடி பிரிவு போலீசார் கஸ்டெடியில் எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும், தவறு செய்தவர்கள் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS