காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய தொலைத் தொடர்பு சேவைகள்!

14 October 2019 அரசியல்
mobile.jpg

கிட்டத்தட்ட 70 நாட்களாக, கற்காலத்திற்கு சென்றிருந்த காஷ்மீர், தற்பொழுது இயல்பு வாழ்கைக்குத் திரும்பியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு இராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

அப்பகுதியில், செல்போன், இணைய சேவை ஆகியவை நிறுத்தப்பட்டன. 45 நாட்களுக்குப் பிறகே, லேண்ட்லைன் சேவை செயலுக்கு வந்தது. இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த, காஷ்மீர் மாநில அரசின், செய்தித் தொடர்பாளர் திரு. ரோகித் கன்சால் விளக்கம் அளித்தார்.

அப்பொழுது, போஸ்ட் பெய்டு சிம் கார்டுகள் மூலம், நாளை முதல் (14-10-2019) தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படும். மேலும், ப்ரீபெய்ட் சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே சமயம், இணைய சேவையும் தொடர்ந்து, ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, ஒரு சிலக் குறிப்பிட்ட இடங்களில், இணைய வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதனால், தற்பொழுது, காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்ப ஆரம்பித்துள்ளதாக, காஷ்மீர் மக்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

HOT NEWS