முழு கொள்ளளவினை எட்டிய செம்பரம்பாக்கம்! வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!

25 November 2020 அரசியல்
nivarr.jpg

தற்பொழுது முழு கொள்ளளவினை செம்பரம்பாக்கம் ஏரி எட்ட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திறக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நிவர் புயல் காரணமாக, கன மழையானது விட்டு விட்டு பெய்து வருகின்றது. இதனால், சென்னை மற்றும் சென்னையினைச் சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியானது, மழையின் காரணமாக நிரம்பி வருகின்றது. எப்பொழுது இந்த ஏரி திறக்கப்படும் என, பொதுமக்கள் பயத்தில் இருந்து வந்தனர்.

இந்த சூழலில், அந்த ஏரியின் 24 அடியில் 22 அடியானது முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையின் நடவடிக்கையாக, இன்று (25-11-2020) நண்பகல் 12 மணிக்கு, செம்பரம்பாக்கம் ஏரியானது திறக்கப்பட உள்ளது. இந்த ஏரிக்கு வருகின்ற நீர் மட்டும், வெளியேற்றப்பட உள்ளது. சுமார் 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், செம்பரம்பாக்கத்தினை ஒட்டியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராமங்களுக்கும், அடையாறு ஆற்றின் இரு கரையோர மக்களுக்கும் வெள்ள எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ச்சி அடைந்து வருகின்றனர்.

HOT NEWS