விரைவில் ஓடிடி தளங்களுக்கு சென்சார்? தப்புமா யூடியூப்?

02 February 2021 தொழில்நுட்பம்
prakashjawadekar12.jpg

விரைவில் ஓடிடி தளங்களுக்கு சென்சார் கொண்டு வரப்படும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஊடகம் மற்றும் சினிமாவில் முதலீடு செய்ய மத்திய அரசானது, கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்டவை அதிதீவிரமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. அவைகளின் வளர்ச்சியினைப் போலவே, அதிருப்தியும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. மிர்சாபூர், உள்ளிட்டப் பல சீரிஸ்களும் எதிர்ப்புகளை சந்தித்தன. ஓடிடி தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என, பலரும் தங்களுடையக் கண்டனக் குரல்களை எழுப்பினர்.

திரையறங்குகளுக்கு படங்கள் வருவதற்கு முன்பு, சென்சார் செய்யப்படுகின்றன. அதன் காரணமாக, ஆபாசமாக பேசவோ அல்லது நடிக்கவோ இயலாது. ஒருவேளை அவ்வாறானக் காட்சிகள் இருக்கின்றப் பட்சத்தில், அவைகளை நீக்கப்படவோ அல்லது இருட்டடிப்போ செய்யப்படும். ஆனால், ஓடிடி தளங்களில் அவ்வாறு கிடையாது. இதனையொட்டி மத்திய அரசானது தற்பொழுது புதிய சாட்டையினை சுழற்றியுள்ளது.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், விரைவில், ஓடிடி தளங்களுக்கு சென்சார் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், இதற்கான உத்தரவானது விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால், விரைவில் ஓடிடி தளங்கள் தணிக்கை செய்யப்பட உள்ளதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆபாசம் நிறைந்த சீரிஸ் மற்றும் படங்களை வாங்க, தயக்கம் காட்டத் துவங்கி உள்ளன.

HOT NEWS