பிபிஓ, ஐடி நிறுவனங்களுக்கு ஜூலை வரை ஹோம் பேஸ்டு ஜாப்! மத்திய அரசு அனுமதி!

29 April 2020 அரசியல்
ravishankarprasad.jpg

இந்தியாவில் உள்ள ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வேலைக்குச் செல்பவர்கள் முதல், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் ஐடி நிறுவனங்கள், வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி அளித்தன. இதனைத் தொடர்ந்து, பெரும்பாலான ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அத்தியாவசிய ஊழியர்களைத் தவிர்த்து மற்ற ஊழியர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றுக் கூறப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, வருகின்ற ஜூலை மாதம் 31ம் தேதி வரை, ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீட்டிலேயே இருந்து வேலை செய்ய அனுமதி அளிக்கப்படுகின்றது என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

HOT NEWS