புதியக் கல்விக் கொள்கை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்! M.Phil படிப்பு கிடையாது!

29 July 2020 அரசியல்
neweducationpolicy20.jpg

மத்திய அரசு உருவாக்கிய புதியக் கல்விக் கொள்கைக்கு, இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக, கல்விக் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், தற்பொழுது இந்தக் கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கல்விக் கொள்கை குறித்துப் புதிய விளக்கத்தினையும் அளித்துள்ளது.

அதன்படி, இனி எம்பில் படிப்புகள் இருக்காது. பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு, ஓரிரு ஆண்டுகள் விடுப்பு வழங்கப்படும். பின்னர், மீண்டும் தங்களுடையப் படிப்பினைத் தொடரலாம். முதலாம் ஆண்டில் பழையக் கல்விக் கொள்கையும், புதியக் கல்விக் கொள்கையும் அமலில் இருக்கும். 2ம் ஆண்டில் இருந்து புதியக் கல்விக் கொள்கையே இருக்கும்.

மத்திய மனித வள அமைச்சகமானது, கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வருகின்ற 2030ம் ஆண்டுக்குள், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், அனைவருக்கும் கல்வி வழங்கப்படும். தரமான கல்விக் கிடைக்காத இடங்களில், சிறப்புக் கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும். பள்ளிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளுடன் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தப்பட்டு விடும்.

HOT NEWS