லாக்டவுன் 4.0 எவைகளுக்கு எல்லாம் அனுமதி? முழுமையான விளக்கம்!

19 May 2020 அரசியல்
lockdownmigrant.jpg

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற மே31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக, டெல்லியில் இருந்து 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எவைகளுக்கு எல்லம் இந்த ஊரடங்கில் அனுமதி, எவைகளுக்கு இந்த ஊரடங்கில் அனுமதி மறுக்கப்பட்டது என, மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றினை வெளியிடப்பட்டது.

எவைகளுக்குத் தடை?

நோய் தடுப்புப் பகுதிகளில் எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், அனைத்துப் பகுதிகளிலும், வான்வளிப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு ரயில்கள் மட்டும் தற்பொழுது இயக்கப்பட்டு வருகின்றன. உணவகங்கள், திரையறங்குகள், மால்கள், ஜிம்கள், உள்ளிட்டவைகளுக்குத் தடை தொடர்கின்றது.

கல்வி நிறுவனங்களைத் தொடங்க தடை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கூட்டு வழிபாடுகளுக்குத் தடை தொடர்கின்றது. இரவு ஏழு மணி முதல் காலை ஏழு மணி வரை வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 65 வயதிற்கு மேல் உள்ளவர்களும், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் வெளியில் நடமாடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எவைகளுக்கு அனுமதி?

சிறப்பு ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நிலைமையைப் பொறுத்து, மாநிலத்திற்கு உள்ளேயே நடைபெறுகின்ற போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மதுபானம், சிகரெட், பான் பொருட்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முடிதிருத்தும் நிலையங்கள், ஸ்பாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மருத்துவ நிலையங்கள், அவுட் பேஷண்ட் வார்டுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மாநிலத்திற்குள் உள்ளே உள்ள மாவட்டப் போக்குவரத்திற்கு அனுமதி. ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி. தனிக்கடைகளுக்கு அனுமதி. ஊரகப் பகுதிகளில் நடைபெறுகின்ற கட்டிடத் தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விவசாயப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வங்கிகள் மற்றும் பைனான்ஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஈ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரியர் மற்றும் போஸ்டல் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சரக்குப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் பணிபுரிய, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, டாக்சி, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

HOT NEWS