நாளை செயல்படும் தொழிற்சாலைகள் பட்டியல்! மத்திய அரசு வெளியிட்டது!

19 April 2020 அரசியல்
modimay3.jpg

நாளை முதல் ஊரடங்கு காலத்தில் செயல்படக் கூடிய தொழிற்சாலைகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

இது குறித்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் வெளியிட்டு உள்ளார். அதன்படி, ஆயுஷ் மற்றும் அது தொடர்பான அனைத்து மருத்துவ துறைகளும், சேவைகளும் செயல்படும். அதே போல, மருந்து கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மீன்பிடித் தொழில், மீன்பிடித்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தேயிலைத் தோட்டம், காப்பி தோட்டம், ரப்பர் தோட்டம், எஸ்டேட் போன்றவை 50% பணியாளர்களுடன் செயல்படலாம். தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், கண்டிப்பாக அனைவரும், சமூக இடைவெளியுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொது விநியோகத்துறை, அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் செயல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் கல்வி முறை, மற்றும் தொலைத்தூரக் கல்விக்கு அனுமதி.

கட்டிடத் தொழிலுக்கு அனுமதி மற்றும் வர்த்தகம் மற்றும தனியார் நிறுவனங்கள் ஆகியவை கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநில அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும், ஹாட்ஸ்பாட்டுகளுக்கு கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS