பப்ஜி உட்பட 18 செயலிகளுக்குத் தடை! மத்திய அரசு அதிரடி!

03 September 2020 அரசியல்
pubg.jpg

சீனாவினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும், பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடித் தடையினை விதித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த ஜூன் 15ம் தேதி நள்ளிரவு அன்று, லடாக் பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், சீனாவின் மீது கடுமையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகின்றது. ஏற்கனவேப் பாதுகாப்பு கருதி யூசி ப்ரௌசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து, 49 செயலிகளுக்கு தடை விதித்தது.

இதில் பாதுகாப்புக் குறைபாடுகள் அதிகம் உள்ளன எனவும், இந்தியர்களின் தகவல்கள் கசிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறியது மத்திய அரசு. இந்தத் தடையால், டிக்டாக் உள்ளிட்டப் பிரபல செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இந்த சூழ்நிலையில், தற்பொழுது கூடுதலாக 118 செயலிகளை நேற்று இரவு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தடை செய்தது.

இந்தியாவில் நான்கு கோடி பேருக்கும் அதிகமானோர் பயன்படுத்தும், பப்ஜி விளையாட்டிற்கும் தற்பொழுது தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில் பப்ஜி உள்ளிட்ட செயலிகள், இந்தியர்களின் தகவல்களை வெளிநாடுகளுக்கு தருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது எனவும், பயனர்களின் பாதுகாப்பு கருதி, இந்த செயலிகளைத் தடை செய்வதாகவும் தெரிவித்து உள்ளது.

HOT NEWS