50% தூதரக அதிகாரிகளை குறையுங்கள்! பாக்கிற்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

24 June 2020 அரசியல்
amitshahspeech.jpg

இந்தியாவில் உள்ள 50% பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என, இந்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த வாரம், பாகிஸ்தான் நாட்டில் உள்ள இரண்டு இந்தியத் தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டு பின்னர், விடுவிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியது. மேலும், பாகிஸ்தான் இராணுவம், ட்ரோன்கள் மூலம், உளவு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, பலத் தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பியும் வருகின்றது.

அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் முயற்சியில், இந்திய இராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. தொடர்ந்து, இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருவதால், அதனுடனான உறவில் தற்பொழுது பெரும் அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை பாகிஸ்தானிற்கு அளித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் உள்ள 50% பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றுக் கூறியுள்ளது. தொடர்ந்து, சீனாவின் அரசாங்கம் பாகிஸ்தானிற்கு ஆதரவளித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் மீது இந்தியா மேலும் தன்னுடைய கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS