வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்! மத்திய அரசு அறிவித்தது!

05 June 2020 அரசியல்
maduraimeenakshiammantemple.jpg

வருகின்ற ஜூன் எட்டாம் தேதி முதல், இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், ஊரடங்கு உத்தரவானது வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்தியாவின் பொருளாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, வருகின்ற ஜூன் 8ம் தேதி முதல், கோயில்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மால்கள் மற்றும் ஓட்டல்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தற்பொழுது புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியினைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது. அனைத்து நுழைவு வாயில்களிலும் சானிட்டைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் கருவியினை வைக்க வேண்டும். அனைவருமே முகக் கவசம் அணிய வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்கள், மற்றப் பிற பொருட்களை யாரும் தொடக் கூடாது. நல்ல இடைவெளி விட்டு, அன்னதானம் வழங்கலாம். அதிகக் கூட்டம் கூடுவதை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். கொரோனா அறிகுறி இல்லையென்றால், மட்டுமே நபர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் உள்ளே செல்லும் கை, கால்களை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். வரிசையில் நிற்கும் பொழுது ஆறு அடி தூரத்திற்கு சமூக இடைவெளியினைக் கடைபிடிக்க வேண்டும் என்றுக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS