இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பலப் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகின்றது. அதன் மூலம், பல லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும் என, மத்திய அரசு கூறி வருகின்றது. காங்கிரஸ் உள்ளிட்டப் பலக் கட்சிகளும், இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இருப்பினும், அருதிப் பெரும்பான்மை இருக்கின்ற காரணத்தால், யாராலும் மத்திய அரசைத் தடுக்க இயலவில்லை.
இந்த சூழ்நிலையில், ஏர் இந்தியாவினை விற்பது, நிலக்கரி உற்பத்தியில் தனியார் முதலீடு, ஆன்லைன் வணிகம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சினிமா துறையில் அனுமதி உள்ளிட்டப் பல திட்டங்களை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகின்றார். இந்நிலையில், தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரமானது, கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியப் பொருளாதாரமானது, நாளுக்கு நாள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இதனால், இந்தியாவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், மத்திய அரசிற்கு 2.1 லட்சம் கோடியானது லாபமாக கிடைக்கும் என்றுக் கூறப்படுகின்றது. இதற்கானத் திட்டங்கள் அனைத்தும், தற்பொழுது முழு வீச்சில் தயாராகி வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகும் என்றுக் கூறப்படுகின்றது.