எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு!

08 September 2020 அரசியல்
lic.jpg

மத்திய அரசு ஏற்கனவே பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் வசம் ஒப்படைத்து வருகின்ற நிலையில், தற்பொழுது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்று வருகின்றது.

ஏர் இந்தியா விற்பனை, விமான நிலையங்களை குத்தகைக்கு விடுதல், இரயில்வேயில் தனியார் ரயில்களுக்கு அனுமதி, நிலக்கரி உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி உட்படப் பல விஷயங்களில், தனியாருக்கு மத்திய அரசு பலவித முன்னுரிமைகளை வழங்கி வருகின்றது. இந்த சூழ்நிலையில், கடந்த வாரம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 15 சதவிகிதப் பங்குகளை விற்க முடிவு செய்தது.

இந்த சூழலில், தற்பொழுது இந்தியாவின் மிகவும் லாபகரமானதாக இருக்கின்ற, எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் நிதி நெருக்கடி மற்றும் வருமானப் பற்றாக்குறையினை சமாளிக்கும் பொருட்டு, அந்த நிறுவனத்தின் 25 சதவிகிதப் பங்குகளை விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, எல்ஐசியின் விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. இதனால், சிறு குறு முதலீட்டாளர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்கள், எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை பல சலுகைகளுடன் வாங்க இயலும். மேலும், 10% வரைத் தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் எனவும், அதன் மூலம் அதிக லாபத்தினை நம்மால் பெற இயலும் என்றும் நம்பப்படுகின்றது.

HOT NEWS