பணக்காரர்களுக்கு அதிக வரி வசூலிக்க கோரிக்கை! மத்திய அரசு மறுப்பு!

27 April 2020 அரசியல்
income-tax.jpg

இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், அதனை சமாளிப்பதற்கு நிதியானது பெருமளவில் தேவைப்படுகின்றது.

இளம் அதிகாரிகள் 50 பேர், இந்தியாவின் நிதித் தேவையினசமாளிக்கும் பொருட்டு, பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க ஆலோசனை வழங்கியுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் நபர்களிடம், 40% வருமான வரி விதிக்க அவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றினை உருவாக்கி இருந்தனர். மேலும், 5 கோடிக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு, மீண்டும் செல்வ வரியினை அறிமுகம் செய்யலாம் எனவும், சர்ஜார்ச்(கூடுதல் வரி) என்ற முறையிலும் வரி விதிக்க ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஒன்று முதல் பத்து கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 2% கூடுதல் வரியும், பத்து கோடிக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு, 5% கூடுதல் வரியும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த அறிக்கையினை இந்தியாவின், 50 வருவாய் அதிகாரிகள் உருவாக்கி இருக்கின்றனர். இதனை, பரிசீலனை செய்யவும் மத்திய வருவாய் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது பொதுமக்களிடையே, பெரிய அளவில் சலசலப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், மத்திய வருவாய் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இவ்வாறு திட்டத்தினை தயாரித்துள்ள அந்த 50 அதிகாரிகள் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இவ்வாறான வரிகளை விதிக்கும் எண்ணம், மத்திய அரசிற்கு இல்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS