கொரோனா மருந்து அனைவருக்கும் கிடையாது! மத்திய அரசு அறிவிப்பு!

02 December 2020 அரசியல்
corona2ndcovid19.jpg

கொரோனாவிற்கான மருந்தானது அனைவருக்கும் வழங்கப்படாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸிற்கு, தற்பொழுது பல நாடுகளைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களுடைய மருந்துகளைக் கண்டுபிடித்து உள்ளன. இருப்பினும், எந்த மருந்தினை சரியாகப் பயன்படுத்துவது என்பதுக் குறித்த சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்த சூழலில் இந்தியாவின் சார்பிலும் மருந்தானது உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதில் கோவாக்ஸின் மருந்தானது, 3வது கட்டப் பரிசோதனையில் உள்ளது. எனவே, கொரோனா மருந்தினை எவ்வாறு பொதுமக்களுக்கு வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு தற்பொழுது புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த, இந்திய சுகாதாரத்துறை செயலாளர் ரமஷ் பூஷண் பேசுகையில், ஒட்டு மொத்தமாக இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து, மத்திய அரசே கூறவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு முதலில் மருந்து வழங்கப்படும் எனவும், பின்னர் அதிகமாகப் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும் எனவும், அவ்வாறு மருந்து வழங்கும் பட்சத்தில் இந்த கொரோனா பரவல் சங்கிலியினை உடைக்க முடியும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS