அரசு பங்களாவினை காலி செய்ய ப்ரியங்கா காந்திக்கு நோட்டீஸ்!

02 July 2020 அரசியல்
priyankagandhivadra0.jpg

டெல்லியில் அரசு பங்களாவில் வசித்து வருகின்ற ப்ரியங்கா காந்தி, உடனடியாக காலி செய்ய வேண்டும் என, வீட்டு வசதி மற்றும் குடும்பநலன் வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ப்ரியங்கா காந்தி, டெல்லியில் உள்ள அரசு சொகுசு பங்களாவில் வசித்து வருகின்றார். அவர் அங்கிருந்து உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும், அவர் தர வேண்டிய 3,45,000 ரூபாயினையும் வழங்க வேண்டும் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை, ப்ரியங்கா காந்திக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால், தற்பொழுது அவர் அந்தப் பங்களாவினைக் காலி செய்து விட்டு, தெற்கு டெல்லியில் உள்ள வீட்டிற்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகும், அவர் அந்த வீட்டில் தங்கினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, அவருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பினை, மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது இவ்வாறு வீட்டினைக் காலி செய்யக் கூறியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS