கேரளாவில் ஊரடங்கு தளர்வுக்கு அனுமதி! மத்திய அரசு விரக்தி!

20 April 2020 அரசியல்
pinarayivijayan19.jpg

இந்தியா முழுக்க கொரோனா வைரஸானது பரவி வருகின்றது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்று (20-04-2020) முதல், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும், அதாவது ஹாட்ஸ்பாட் என அறிவிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர்த்து, பிற இடங்களில் ஊரடங்கு உத்தரவானது தளர்த்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கேரளாவில் தற்பொழுது இந்த ஊரடங்கு உத்தரவானது, கிட்டத்தட்ட முழுமையாகத் தளர்த்தப்பட்டே உள்ளது என்றுக் கூறலாம். அந்த அளவிற்கு, அங்கு பொதுமக்கள் நடமாடத் தொடங்கி உள்ளனர். கேரளாவில் மொத்தமாக, 55,590 பேர் கண்காணிப்பில் உள்ளனர் எனவும், 401 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது எனும், அதில் தற்பொழுது 129 பேர் மட்டுமே பாதிப்பின் காரணமாக, சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும் முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

270 பேர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும், இருவர் மரணமடைந்தும் உள்ளனர் எனவும் கூறியுள்ளார். தற்பொழுது புதிதாக இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 19,351 இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளன எனவும், 18,547 பேருக்கு இந்த நோய் தொற்று இல்லை எனவும் கூறியுள்ளார்.

அங்கு தற்பொழுது சலூன் கடைகள், புத்தக கடைகள், கட்டுப்பாடுகளுடன் வாகன ஓட்டுவதற்கு அனுமதி, குறைவான பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி, சிறுகுறு தொழிற்சாலைகளுக்கு அனுமதி, உணவு விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், இவ்வாறு பொதுமக்கள் நடமாடினால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது என, மத்திய உள்துறை செயலகம், தன்னுடைய கடிதத்தில் கேரளாவிற்கு கூறியுள்ளது.

HOT NEWS