பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்று பகுதிகளாக பிரிக்க மத்திய அரசு முடிவு!

15 April 2020 அரசியல்
coronapanademic19.jpg

இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மூன்றாகப் பிரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர், தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், வருகின்ற மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், எந்தெந்த நிறுவனங்கள் செயல்படலாம் என்ற அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தனித்தனியாகப் பிரித்து, அவைகளை தீவிரமாகக் கண்காணிக்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதியினை சிவப்பு நிறத்திலும், மிதமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதியினை ஆரஞ்சு நிறத்திலும், பாதிப்பில்லாத பகுதிகளை பச்சை நிறத்திலும் குறிக்க முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டம், விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இந்த விஷயத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS