பிரச்சனை என்ன இன்றுக்குள் கூறுங்கள்! மத்திய அரசு வேண்டுகோள்!

02 December 2020 அரசியல்
farmersprotest.jpg

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம், உங்களுடையப் பிரச்சனைகளை இன்றைக்குள் கூறுங்கள் என, மத்திய அரசு கூறியுள்ளது.

டெல்லியில் பல வட மாநிலங்களைச் சேர்ந்த, லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையானப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று விவசாய சங்கங்களுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இதில் பெரிய அளவில் யாருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, தற்பொழுது வரை போராட்டமானது தொடர்கின்றது. இந்த சூழலில், மத்திய அரசானது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளின் சங்கங்களுக்கு புதிய வேண்டுகோள் ஒன்றினை தெரிவித்து உள்ளது.

அதில், உங்களுடைய பிரச்சனைகள் என்ன மற்றும் உங்களுடையக் கோரிக்கைகள் என்ன என்று, இன்றுக்குள் கூறுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 3ம் தேதி அன்று, விவசாயி சங்கங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS