வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு! தொண்டர்கள் போராட்டம்!

11 September 2019 அரசியல்
chandrababuarrested.jpg

ஆனால், இப்படி ஒரு நிலைமை வரும் என்று, கனவிலும் நினைத்து இருக்கமாட்டார், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு. ஆந்திராவில் நடைபெற்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின், அவருடைய வீட்டினை முதலில் குறி வைத்தது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு.

இப்பொழுது, அதற்கும் மேலே சென்று, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு. குண்டூர் பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியினரை, ஒய்எஸ்ஆர் கட்சியினர் தாக்கியதாகக் கூறி, அங்கு போராட்டம் நடத்த, சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், அவரும் அவருடைய மகன் திரு. நர லோகேஷ் ஆகியோரும், தற்பொழுது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் செல்ல இயாலாதபடி, போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இவர் வீட்டுக் காவலில் இருப்பதை அறிந்த அவருடையத் தொண்டர்கள், வீட்டிற்குள் செல்ல முயற்சி செய்தனர். இதனால், அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த போலீசார், அவர்களை லேசான தடியடி நடத்திக் கலைத்தனர். மற்றும், அவர் வீட்டினை சுற்றியுள்ள ஒரு சிலப் பகுதிகளில், 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

HOT NEWS