நிலவிற்கு சந்திராயன் 2 விண்கலத்தினை, இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பி சாதனைப் படைத்தனர். சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த, விக்ரம் லேண்டர் விண்கலம் நிலவில் இறங்க வேண்டிய வரலாற்றுச் சாதனையைக் காண, பாரதப் பிரதமர் மோடி உட்பட உலகமே, இஸ்ரோ நோக்கிக் காத்திருந்தது.
இந்நிலையில், நிலவின் தரைப் பகுதியில் இருந்து, வெறும் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில், விக்ரம் லேண்டரில் இருந்து வந்த சிக்னல் கட்டானது. இதனால், விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் முயற்சித் தோல்வி அடைந்தது.
தொடர்ந்து, நாசாவும் இந்தியாவிற்காக, தன்னுடைய ஆர்பிட்டரை அனுப்பி, விக்ரம் லேண்டரைப் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தது. இருப்பினும், விக்ரம் லேண்டரினை தெளிவாக புகைப்படம் எடுக்க இயலாமல், அதன் முயற்சியும் தோல்வி அடைந்தது. இதனால், விக்ரம் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்தும் முயற்சியில் தோல்வி அடைந்ததாக அறிவித்தது. மேலும், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனக் கூறியது இஸ்ரோ.
இந்நிலையில், தற்பொழுது, நிலவினை சுற்றி வரும், சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம், நிலவினை புகைப்படம் எடுத்துள்ளது இஸ்ரோ. அப்படங்களை, தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.