ஜூலை 22ம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் பாய உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த திங்கள் அதிகாலை ஜூலை 15ம் தேதி அன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவுவதற்காக, கவுண்ட் டவுன் தொடங்கியது. இந்நிலையில், 56 நிமிடங்கள், 24 வது நொடியில், கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டது. எரிபொருள் ஏற்றப்படும் பொழுது, ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, அன்று விண்ணில் ஏவுவதற்கான திட்டம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து, சுமார் 44 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்த விண்கலம் எம்.கே-3 வகையைச் சேர்ந்தது. இது சந்திராயன்-2 செயற்கோளை வரும் ஜூலை 22ம் தேதி மாலை 2.43 மணிக்கு, விண்ணில் ஏவுவதற்கு தயாராகி வருகிறது. இந்த சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நிலவிற்கு அனுப்பிய சந்திராயன் விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. இந்நிலையில், சந்திராயன்-2, நிலவில் எதைக் கண்டுபிடிக்கும் என்பதை உலக விஞ்ஞானிகள் அனைவருமே எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.