நிலவின் 3வது வட்டப்பாதையில் சந்திராயன்2! நிலவினை நெருங்கி வருகிறது!

28 August 2019 தொழில்நுட்பம்
chandrayaan2launched.jpg

இன்று காலை 9.04 மணியளவில், நிலவின் மூன்றாவது சுற்று வட்டப்பாதையில், நுழைந்தது சந்திராயன் 2 விண்கலம்.

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையம், கடந்த மாதம் நிலவினை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. ஒவ்வொரு கட்டத்தையும் வெற்றிகரமாகக் கடந்த சந்திராயன் விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பின், மீண்டும் அங்கிருந்து நிலவினை நோக்கி, தன்னுடையப் பயணத்தைத் தொடர்ந்தது.

இந்நிலையில், இன்று காலை சரியாக 9.04 மணியளவில், நிலவின் மூன்றாவது சுற்றுவட்டப் பாதையில், நுழைந்தது சந்திராயன் 2 விண்கலம். இந்த சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து, சரியாக 11 நாட்கள் கழித்து, சந்திராயன் 2வில் உள்ள ஆராய்ச்சி செய்யும் கருவி, நிலவில் தரையிறங்க உள்ளது.

HOT NEWS