சந்திராயன் 2 ரோவர் நிலவில் உள்ளது! தமிழர் கண்டுபிடிப்பு!

03 August 2020 சினிமா
pragyanrover.jpg

சந்திராயன் 2 ரோவரானது, நிலவில் பாதுகாப்பாக உள்ளது என, தமிழக மென்பொறியாளர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, உலகமே எதிர்பார்த்த சந்திராயன் 2 விண்கலமானது இந்தியாவின் சார்பில் நிலவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதில் இருந்து விக்ரம் லேண்டர் விண்கலம் நிலவின் தரைக்கு மேல் 2 கிலோமீட்டர் இருக்கும் பொழுது தன்னுடைய தொடர்பினை இழந்தது. இதனால், இந்த முயற்சியானது தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து, இதை தேடும் முயற்சியானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, நாசாவின் உதவியினையும் இந்தியாவின் இஸ்ரோ கேட்டது. நாசாவும், இஸ்ரோவும் தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாகத் தேடியும் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தினைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த சூழ்நிலையில், தமிழகத்தினைச் சேர்ந்த மென் பொறியாளர் சண்முகப் பொறியாளர்.

இந்த நிலையில், தற்பொழுது இஸ்ரோவிற்கு அவர் புதிய இமெயில் ஒன்றினையும் அனுப்பி உள்ளார். அதில், விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரானது, எவ்வித சேதமுமின்றி தரையிறங்கி உள்ளது. தகவல் தொடர்பில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என, அவர் மெயில் அனுப்பி இருக்கின்றார்.

HOT NEWS