3840 கிலோ எடையுள்ள சந்திராயன்-2 செயற்கைக்கோளை, இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில், நிலைநிறுத்தி சாதனைப் படைத்தனர்.
இன்று பிற்பகல் 2.43 மணியளவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜிஎஸ்எல்வி எம்கே-3-எம்1 விண்கலம், சந்திராயன்-2 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது. சரியாக 16 நிமிடம் 14 வினாடிகளில், சந்திராயன் விண்கலம் புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
வரும் செப்டம்பர் 7ம் தேதி 100கிமீ 30கிமீ என்ற அளவில், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்து, பின்னர் நிலவின் தென் துருவப் பகுதியில் ஆராய்ச்சி செய்ய உள்ளது. நிலவின் தென் பகுதியை ஆராய்ச்சி செய்யும், உலகின் முதல் செயற்கைக்கோள் ஆகும்.
இந்த சாதனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல தலைவர்களும், பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.