நிலவில் இருந்து புவிக்கு திரும்பும் சீன விண்கலம்! விண்வெளி ஆய்வில் மைல்கல்!

12 December 2020 தொழில்நுட்பம்
satellite11.jpg

நிலவில் உள்ள பாறைகளை சேகரித்துக் கொண்டு, புவிக்கு சீனாவின் சாங்-ஈ 5 என்ற விண்கலமானது திரும்பிக் கொண்டு உள்ளது.

நிலவிற்கு சென்று அங்குள்ள பாறைகளை எடுத்து வந்து, ஆய்வு செய்வதற்காக சீன அரசானது சாங்-ஈ 5 என்ற விண்கலத்தினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியது. இந்த விண்கலமானது, கடந்த வாரம் நிலவில் தன்னுடைய ரோவரினை வெற்றிகரமாகத் தரையிறக்கியது. நிலவில் அமெரிக்காவினைத் தொடர்ந்து சீனாவும் தன்னுடைய தேசியக் கொடியினை நட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சாங்-ஈ 5 விண்கலத்தின் மூலம், நிலவில் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள விண்கற்களையும் சேகரித்துள்ளது.

இந்த விண்கலமானது, கடந்த சனிக்கிழமை இரவு, மீண்டும் புவியினை நோக்கித் தன்னுடையப் பயணத்தினை ஆரம்பித்து உள்ளது. அந்த விண்கலத்தில் உள்ள நான்கு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டன. அந்த விண்கலமானது, தொடர்ந்து 22 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுபட்டு புவிக்கு திரும்ப ஆரம்பித்து உள்ளது. வருகின்ற புதன் கிழமை அதிகாலையில் இது புவிக்குத் திரும்பும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS