உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு! கலங்க ஆரம்பித்த சென்னை!

18 November 2020 அரசியல்
rainflood.jpg

தற்பொழுது தமிழகத்தில் பருவமழையானது கடுமையாகப் பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகின்றது. இதனை சென்னை மாநகராட்சி உண்ணிப்பாக கவனித்து வருகின்றது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவ மழையானது, தீவிரமடைந்து உள்ளது. தொடர்ந்து, பல மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. இந்த மழையால், நீர் தேக்கங்கள், நீர் நிலைகள், ஆறு, ஏரி, குளம் மற்றும் அணைகள் எனப் பலவும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், இந்த ஆண்டு நீர் பற்றாக்குறை ஏற்படாது என பலரும் நம்புகின்றனர். இருப்பினும், இந்த ஆண்டு பெய்து வருகின்ற பருவ மழையானது, கடந்த ஆண்டினை விட 40% குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகின்றது.

இந்த சூழலில், சென்னையில் தொடர்ந்து பெய்து வருகின்ற கனமழையின் காரணமாக, அந்நகருக்கு நீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியானது, நிரம்பி வருகின்றது. அந்த ஏரியின் முழு கொள்ளளவாக 2,926 மில்லியன் கன அடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தற்பொழுது வரை 2,898 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் நிரம்பி உள்ளது. தற்பொழுது 21.27 அடியாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீரளவானது உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், செம்பரம்பாக்கம் ஏரியானது திறந்து விடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

அவ்வாறு திறந்தால், சென்னை நகரமே வெள்ளத்தில் மீண்டும் மூழ்கும் என பலரும் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

HOT NEWS