இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்! நள்ளிரவில் நடைபெற்ற போராட்டம்! திமுக கண்டனம்!

15 February 2020 அரசியல்
vannarapettaiprotest.jpg

சென்னை வண்ணாரப்பேட்டியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தாக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த 27ம் தேதி வரை, சென்னையில் போராட்டம் நடத்தக் கூடாது என, தமிழக போலீசார் அறிவித்து இருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென சிஏஏ சட்டத்திற்கு எதிராக, சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இதனால், அந்தப் பகுதியில் போலீசார் குவிந்தனர். பெண்கள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் என பலரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில், அவர்களை அங்கிருந்து கிளம்ப வேண்டும் என, போலீசார் அறிவித்தனர். அதனை போராட்டக்காரர்கள் கேட்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர்களை வலுக்கட்டாயமாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முயற்ச்சித்தனர்.

அப்பொழுது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், போலீசார் பல பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தாக்கியதாக புகார் எழுந்தது. போலீசாரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தின் பல பகுதிகளில், இஸ்லாமியர்கள் திடீரென்று போராட்டம் நடத்தினர். மேலும், வண்ணாரப்பேட்டையில், போராட்டத்தில் ஈடுபட்டதாக 120 பேரினை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் விடுவிக்கப்படுவர் என, போலீசார் கூறியதும் போராட்டத்தினை கைவிட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் கலைந்தனர். இதனிடையே, இது குறவித்து, விசாரிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக டிஜிபியினை அழைத்துள்ளார்.

HOT NEWS