கொரோனாவுக்கு சென்னை டாக்டர் பலி! அதிகரிக்கும் தொற்று!

20 April 2020 அரசியல்
coronavirusprotection.jpg

சென்னையில் கொரோனா வைரஸ் காரணமாக டாக்டர் ஒருவர் பலியாகி உள்ள சம்பவம், அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாக பரவி வருகின்றது. இதனால், ஊரடங்கு உத்தரவானது தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அரசின் உத்தரவினை மீறி, அநாவசியமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம், வழக்குப் பதிவு, வாகனம் பறிமுதல் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, 55 வயதுடைய மருத்துவர் தனியார் மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி வந்தார். அவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று அவர் சிகிச்சைப் பலனிறி உயிரிழந்தார். இவருடன் சேர்த்து, தமிழகத்தில் தற்பொழுது இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 16 ஆக உயர்ந்துள்ளது. அவர் இருதய வலியின் காரணமாக இறந்தார் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

HOT NEWS