சென்னையில் 13 வயது சிறுமியினை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, தற்பொழுது வரை அப்பெண்ணின் சகோதரி உட்பட 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள எண்ணூர் பகுதியில், 13 வயது சிறுமியினை அவருடைய மூத்த சகோதரி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, அவருடைய தாய் போலீசில் புகார் அளித்தார். அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதி மற்றும் அவருடைய கணவர் மதன்குமார் ஆகியோரினைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதில் மதன்குமார் கொடுத்தத் தகவலின் அடிப்படையில், புரோக்கராக செயல்பட்ட பாஜக பிரமுகர் ராஜேந்திரன், பாலியல் தொழிலிக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட 8 பேரினை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சிறுமியின் சகோதரிக்கு கொடுத்த வட்டிப் பணத்திற்காக, அந்த சிறுமியினை பலமுறை பயன்படுத்திக் கொண்ட பைனான்சியரும், தனியார் டிவி சேனல் எழுத்தாளருமான வினோபாஜி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி முதலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர், அச்சிறுமியிடம் ஒவ்வொரு புகைப்படங்களாக காட்டி விசாரித்தனர். அதில் அச்சிறுமி பலரையும் அடையாளம் காட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது.
இதில் எழுத்தாளர் எனக் கூறிக் கொள்ளும் வினோபாஜியின் அத்துமீறல்கள் தான், போலீசாரையே எரிச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால், வினோபாஜியினை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கடுமையான விசாரணையினை மேற்கொண்டனர். அதில், பலத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் பகுதியில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலில் ஈடுபடும் குழுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த தொழிலுக்காக வெளி மாநிலங்களில் இருந்து, பெண்கள் வாடகைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அவர்களை பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரியும், அவருடைய கணவர் மதன்குமாரும், வினோபாஜியிடம் கடன் வாங்கி பாலியல் தொழிலை நடத்தியுள்ளனர். இதில், முதலில் ஆயிரக்கணக்கில் பணம் வந்ததாகவும், ஆனால் இந்த சிறுமியினை தொழிலில் ஈடுபடுத்தியதில், பணமானது மழையாகக் கொட்ட ஆரம்பித்ததாகவும் கூறியிருந்தனர். வட்டிக்குப் பதிலாக, வினோபாஜிக்கு அச்சிறுமியினை இரையாக்கி இருந்ததும் வெளியாகி உள்ளது.
வினோபாஜியிடம் இருந்து 50க்கும் மேற்பட்டவர்கள், இந்தப் பாலியல் தொழிலுக்காக பணம் வாங்கியிருப்பதாகவும், அவர்கள் பெயர்கள் சேகரிக்கப்பட்டு தற்பொழுது விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கட்டத்தில், சிறுமியின் சகோதரிக்கும், அவருடையக் கணவர் மதன்குமாருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் கடுப்பான மதன்குமார், இந்த விஷயத்தினைப் போட்டுக் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது. தற்பொழுது எட்டு பேரையும், போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.