சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்!

06 September 2019 அரசியல்
tahilrahani.jpg

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விகே தஹில் ரமானி, தன்னுடையப் பதவியை ராஜினாமா செய்தார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்திடம் அளித்துள்ளார்.

மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு, மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழ்நிலையின் காரணமாக, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி. அது மட்டுமின்றி, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்கும் ஒரு நகல் அனுப்பி இருக்கின்றார்.

25 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் தஹில் ரமானி மற்றும் கீதா மிட்டல் மட்டுமே, பெண் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவர். இதில், தஹில் ரமானி சிறப்பு வாய்ந்த, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார்.

வரும் அக்டோபர் 2ம் தேதி 2020ம் ஆண்டு இவர் ஓய்வு பெற இருந்த நிலையில், மேகாலயா போன்ற சிறிய மாநிலத்திற்கு செல்ல மறுத்து, தன்னுடையப் பதவியை ராஜினாமா செய்தார்.

HOT NEWS