ஏஐசிடிஇ விதிகளை மீற முடியாது! அரியர் விவகாரத்தில் நீதிமன்றம் கடுமை! அப்போ பாஸ்?

09 October 2020 அரசியல்
highcourt.jpg

அரியர் மீதான தேர்ச்சி விவகாரத்தில், ஏஐசிடிஇ விதிகளை மீற முடியாது என, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவியிருப்பதன் காரணமாக, கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் நிலவி வருகின்றது. இதனால், தேர்வுக்கு கட்டணம் எழுதிய மாணவர்கள் அனைவரும், தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை எதிர்த்து, பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி குறித்து ஏஐசிடிஇ எவ்விதக் கடிதமும் தனக்கு அனுப்பவில்லை எனவும், அவ்வாறு தேர்ச்சி பெற்றது தவறு என ஏஐசிடிஇ கடிதம் எழுதியுள்ளதாக, அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்து உள்ளார். இது குறித்து நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள ஏஐசிடிஇ அரியர் தேர்வு ரத்து என்பது பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் எங்களுடைய விதிகளுக்கு முரணானது என்றுக் கூறியுள்ள்ளது.

இதனை கேட்ட நீதிபதிகள், ஏஐசிடிஇ விதிகளை தங்களால் மீற முடியாது எனவும், அரியர் தேர்விற்கு ஆதரவாக வழக்குத் தொடர்ந்துள்ள மாணவர்களின் அரியர் எண்ணிக்கை மற்றும் 10ம் வகுப்பு முதல் அவர்கள் எடுத்த மதிப்பெண் உள்ளிட்டவைகள் கேட்கப்படும் எனவும் எச்சரித்தனர். ஏற்கனவே பொறியியல் படித்தவர்கள் சொமட்டோ, ஸ்விகி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றால், மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் எனக் கவலைத் தெரிவித்தனர்.

HOT NEWS