CHENNAI TALKS யூடியூப் சேனல் நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு! கைதால் கண்ணீர்!

12 January 2021 சினிமா
chennaitalks.jpg

பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாகவும், கேள்விக் கேட்டதாகவும் CHENNAI TALKS யூடியூப் சேனலின் நிர்வாகிகள் 3 பேரினை, போலீசார் கைது செய்துள்ளனர்.

யூடியூப் சேனல்களில் பலச் சேனல்கள், தெருவில் செல்பவர்களிடம் ’எடக்கு மடக்காக’ கேள்விக் கேட்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட சேனல்களில் முதன்மையான சேனலாக, CHENNAI TALKS என்ற சேனல் இருந்து வருகின்றது. அந்த சேனலைச் சேர்ந்த அசன் பாட்சா என்பவர் பெண்களிடம் விர்ஜின் மாப்பிள்ளை பிடிக்குமா, கல்யாணத்திற்கு முன் எத்தனை பேருடன் உறவு வைத்துள்ளீர்கள் என்பது உள்ளிட்ட அந்தரங்கக் கேள்விகளை கேட்டு வந்தார்.

அவருடைய சேனலுக்கும் நல்லதொரு மதிப்பு கிடைத்து வந்தது. சப்ஸ்க்ரைபர்களும் கணிசமாக உயர ஆரம்பித்தனர். இந்த சூழலில், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ஒருவர், சாஸ்திரி நகர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், பெண்களிடம் வக்ரமமான கேள்விகளை கேட்பதாகவும், ஆபாசமாகப் பேசுவதாகவும் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்த புகாரினை ஏற்றுக் கொண்ட போலீசார், CHENNAI TALKS நிகழ்ச்சித் தொகுப்பாளர் அசன் பாட்சா, கேமிரா மேன் அஜய் பாபு, அந்த சேனலின் உரிமையாளர் தினேஷ் குமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

HOT NEWS