சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் அனைத்தும், தற்பொழுது இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளதால், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருந்த பல்கலைக் கழகத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தில் இது குறித்து பேசிய தமிழக முதல்வர், தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
இது பெருமளவில் வரவேற்பினைப் பெற்றாலும், ஒரு பக்கம் சர்ச்சையினைக் கிளப்பியது. இது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகம் தன்னுடைய தேர்வு முடிவினை வெளியிட்டு உள்ளது. அதில், தேர்வுக் கட்டணம் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ளது. அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ளது.