பிக்பாஸை விட்டு வெளியேறினார் சேரன்!

23 September 2019 அரசியல்
cheran.jpg

பிக்பாஸ் நிகழ்ச்சி மிகத் தீவிரமாக தற்பொழுது சென்று கொண்டு இருக்கின்றது. யார் வெளியேறுவார், யார் வெல்வார் என பலரும், தங்களுடைய நகத்தைக் கடித்துக் கொண்டுப் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ்3 நிகழ்ச்சி தற்பொழுது, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் இருந்து, சேரன் நேற்று வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ்3 நிகழ்ச்சியில், முதலாம் நாளில் இருந்து, 91ம் நாள் வரை, நடிகரும் இயக்கனரும் ஆன திரு.சேரன் பங்குபெற்றே விளையாடி வந்தார். அவர் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா மீது, அதிக பாசம் வைத்திருந்தார். மேலும், லாஸ்லியா கவினைக் கதாலிப்பதனை சேரன் மறைமுகமாக எதிர்த்தும் வந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து அட்வைஸ் மட்டுமே செய்து வந்த சேரன், ஒரு சிலப் போட்டிகளில் வயதின் காரணமாக, சரியாக விளையாடவில்லை. முதல் வாரம் தொடர்ந்து, கடந்த வாரம் வரை, இவரை எவிக்சனுக்காக நாமினேஷன் செய்து வந்தனர். ஏற்கனவே, எவிக்ட் செய்யப்பட்ட சேரன், தனியாக ஒரு சீக்ரெட் ரூமில் தங்க வைகப்பட்டார். பின்னர், மீண்டும் பிக்பாஸ் 3 வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வாரம், கடுமையான டாஸ்க்குகளை போட்டியாக வைத்தனர் பிக்பாஸ் குழுவினர். இதில் கடுமையாக அனைத்துப் போட்டியாளர்களும் விளையாடி வந்த நிலையில், சேரனுக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டது. இருப்பினும், சமாளித்துக் கொண்டு விளையாடினார். ஆனால், நாமினேஷனில் இருந்ததால், அவர் கோல்டன் டிக்கெட்டினை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

எவிக்ஷன் தினமான நேற்று, லாஸ்லியா மற்றும் சேரனை கமல்ஹாசன் தனி அறைக்கு வரச் சொன்னார். அதில் சேரன் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 91 நாட்கள், சிறப்பாக விளையாடிய சேரன், நேற்று வெளியேறினார். அது குறித்து அவர் பேசுகையில், எனக்கு இதுவே பெருமையாக உள்ளது என்று கூறினார்.

HOT NEWS