பிக்பாஸ் 3 ஆரம்பம் ஆனது முதல், தினமும் கண்டென்ட்டுக்குப் பஞ்சம் இல்லை. புதிது புதிதாக கண்டென்ட் கொடுத்துக் கொண்டே இருப்பதால், மிமீ கிரியேட்டர்கள், மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர்.
வனிதா விஜயகுமார் போலீஸ் பிரச்சனை முதல், மதுமிதா தற்கொலைப் பிரச்சனை வரை, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரச்சனையாகவே போகின்றது. இதனிடையே சேரன் எதற்குப் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார் எனப் பலரும், தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், பிக்பாஸில் உள்ளவர்கள் சேரனை காழ்ப்புணர்ச்சியுடனேயேப் பார்க்கின்றனர். இதுவரை நடந்த நாமினேஷன்களில், சேரனுடையப் பெயர் இல்லாமல் இல்லை. ஆனால், அவருக்கு ரசிகர்கள் மத்திய அமோக ஆதரவு உள்ளதால், பிக்பாஸில் உள்ள சகப் போட்டியாளர்களால், அவரை வெளியேற்ற முடியவில்லை.
தொடர்ந்துப் பல முறை நாமினேட் செய்தும், அவர் வெளியேறாமல் உள்ளதால், அவர் தற்பொழுது வலிமையாக உள்ளதாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. அவர் மிக நேர்மையாக நடந்து கொள்வதாக, அவருடைய ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடுகின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க, மற்ற போட்டியாளர்களின் தவறுகளும், சேரனுக்கு மிகப் பெரிய பலமாக மாறியுள்ளது. எது எப்படியோ, ஒரு நல்ல இயக்குநர் சேரன், அவர் நல்லபடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியை வென்றால் அது மகிழ்ச்சி தானே!