விரைவில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தினை தான் இயக்க உள்ளதாக, இயக்குநர் சேரன் தெரிவித்தார். இது குறித்து பிக்பாஸில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சேரன் உட்பட, அனைத்துப் போட்டியாளர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்பொழுது சேரனிடம், பிக்பாஸிற்குப் பிறகு, உங்களுடைய அடுத்த நகர்வு என்ன? எனக் கேட்டனர். அதற்கு சிரித்த கமல்ஹாசன், இது கேள்வி அல்ல வாழ்த்து என கூறினார். இதற்கு ரசிகர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.
அப்பொழுது பேசிய சேரன், நான் ஏற்கனவே இதுகுறித்து பேசி முடித்துவிட்டுத்தான், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளேன். இந்த நிகழ்ச்சிக்குப் பின், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் இயக்க உள்ளேன் என தெரிவித்தார்.
இதனை ஏற்கனவே, சேரன் தன்னுடைய படமான திருமணம் என்னும் படத்தின், பாடல் வெளியீட்டு விழாவில், பேசியிருந்தார். அப்பொழுது அவர் பேசுகையில், கண்டிப்பாக, என்னுடையப் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக வாக்களித்துள்ளார். விரைவில் நானும், நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து படம் உருவாக்குவோம் எனக் கூறியிருந்தார்.