பிக்பாஸ் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. இந்நிலையில், இயக்குநர் சேரன் தற்பொழுது, பிக்பாஸ்3யின் சக போட்டியாளரான, மதுமிதாவின் வீட்டிற்குச் சென்று விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், தன்னை காயப்படுத்திக் கொண்டதற்காக, நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுதே வெளியேற்றப்பட்டார் நடிகை மதுமிதா. பின்னர், விஜய் டிவியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து, புகார் தெரிவித்தும் வந்தார்.
பின்னர், நிகழ்ச்சி முடிவிற்கு வந்ததை அடுத்து இயக்குநர் சேரன், சாண்டி மாஸ்டர் உட்பட பலரை சந்தித்து வந்தார். இந்நிலையில், நடிகை மதுமிதா மீது அதிக அக்கறை வைத்திருந்த சேரன், மதுமிதாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, சேரனுக்கு நடிகை மதுமிதா மற்றும் அவரது கணவர் என இருவரும் சேர்ந்து, சேரனுக்குத் தடாபுடலாக தலை வாழை இலை விருந்து வைத்து கவணித்துள்ளனர்.
இது பற்றியப் புகைப்படங்கள், தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றன.