அநியாயமா கொன்னுட்டானுங்க! கலங்கிய சேரன் எதற்குத் தெரியுமா?

23 March 2020 சினிமா
rajavukkucheck.jpg

இயக்குநரும், நடிகருமான சேரன் தற்பொழுது உருக்கமானப் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, அவர் நடிப்பில் ராஜாவுக்கு செக் என்றத் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக சேரன் நடித்திருந்தார். அப்படத்தினை, சாய் குமார் இயக்கி இருந்தார். நடிகை சராயூ, சேரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படம், வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை.

இந்நிலையில், இத்திரைப்படமானது தற்பொழுது தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி உள்ளது. இதனைப் பலரும், இணையத்தில் டவுன்லோட் செய்து பார்த்து வருகின்றனர். அதில்ஒரு ரசிகை ஒருவர் ராஜாவுக்கு செக் படத்தை பார்த்தேன். நல்ல திகில் படமாக இருந்தது என்று பாராட்டி கருத்து பதிவிட்டு இருந்தார்.

இதற்கு சேரன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியது, ‘அநியாயமாக படத்தை கொன்னுட்டாங்கம்மா. எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன் படத்தில் வசனம் இருக்கும். அப்படி கஷ்டப்பட்டு உழைத்ததை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா. அவர்கள் நல்லா இருப்பார்களா? என் வயிறு எறியுதும்மா. இது அவர்களை சும்மா விடாது. எங்களோட உழைப்பை அநியாயமாக ஏமாத்திட்டாங்கமா என்று ஆவேசமாக சேரன் அவர்கள் பதில் அளித்து உள்ளார்.

HOT NEWS