சிறுமி பாலியல் கொலை! குற்றவாளிக்கு தூக்கு! மக்கள் மகிழ்ச்சி!

28 December 2019 அரசியல்
kovairapecase.jpg

கோவையில் ஆறு வயது சிறுமி, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் துடியலூர் கிராமம், பன்னிமடைப் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்தார் அந்த சிறுமி. ஒன்றாம் வகுப்புப் படித்து வந்த, அந்த ஆறு வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அன்று, திடீரெனக் காணாமல் போனார். இதனையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, போலீசார் தேட ஆரம்பித்தனர். அப்பொழுது, எதிர்வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதறில் கை மற்றும் கால்கள் துணியினால் கட்டப்பட்ட நிலையில், சிறுமி சடலமாகக் கிடந்தார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீசார் அந்தக் குழந்தையின் சடலத்தினை மீட்டு, பிரேதசப் பரிசோனதைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் எனவும், மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியானது. இதனால், போலீசாரே அதிர்ந்தனர். இதனால், போராட்டங்கள் மற்றும் வாக்குவாதம் என, அப்பகுதி மக்கள் போலீசாருடன் ஈடுபட்டனர்.

இந்த வழக்கினை தீவிரமாக போலீசார் விசாரிக்க ஆரம்பிக்கையில், மனைவியினை விட்டுத் தனியாக தன் பாட்டியுடன் எதிர் வீட்டில் வாழ்ந்து வந்த, சந்தோஷ்குமார் என்பவரைப் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்து வந்தனர். போலீஸ் விசாரணையைப் பற்றித் தான் நமக்குத் தெரியுமே. பாலியல் கொலை என்பதால், கடுமையான விசாரணை நடைபெற்றுள்ளது. அதில், தான் கொலை செய்ததாக சந்தோஷ்குமார் ஒப்புக்கொண்டார்.

பின், இது பற்றிய வழக்கு விசாரணையானது, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இருந்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பானது நேற்று வெளியானது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஏழு ஆண்டு சிறைத் தண்டனையுடன் தூக்குத் தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

இந்த வழக்கில், திடீர் திருப்பமாக, இறந்த சிறுமியின் தாயர் மேலும் ஒரு மனுவினை நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதில், இந்த குற்றத்தில் மேலும் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என, பிரத்பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, அவரையும் கண்டுபிடித்து, அவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, நீதிமன்றத்திற்கும், நீதிபதிக்கும் தன்னுடைய நன்றியினை சிறுமியின் தாய் தெரிவித்தார். தொடர்ந்து, உதவி செய்து வந்த மாதர் சங்கத்திற்கு தன்னுடைய நன்றியையும் தெரிவித்தார். தொடர்ந்து, இது போன்ற அக்கிரமங்களுக்கு எதிராக மாதர் சங்கத்துடன் இணைந்துப் போராடா உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

HOT NEWS